×

தப்பியோடிய காலிஸ்தான் ஆதரவு தலைவன்; அம்ரித்பாலை தேடுவது சட்டவிரோதமானது: இங்கிலாந்து குடியுரிமை பெற்ற மனைவி ஆவேசம்

அமிர்தசரஸ்: தப்பியோடிய காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளரான அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் தேடிவருகின்றனர். இந்நிலையில் அவரது மனைவி கிரண்தீப் கவுர், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘அம்ரித்பாலை போலீசார் தேடி வருவது சட்டவிரோதமானது. அவரை போலீசார் கைது செய்வதை தடுக்கவிைல்லை. ஆனால் அவரை தேடுகின்ற விதம் சரியில்லை. ஒருவரை இவ்வாறு தடுத்து வைக்க முயல்வது தவறு. எக்காரணம் கொண்டும் அம்ரித்பால் சிங்கின் அமைப்பில் இருந்து நான் விலகி இருக்க மாட்டேன்.

அவர் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும். அவர் இருக்கும் இடம் எனக்கு தெரியாது. அவருடன் யாரும் தொடர்பில் இல்லை. எனக்கு எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்று அவர் என்னிடம் கூறியிருந்தார். இவ்வாறு போலீஸ் ஒரு நாள் என்னை துரத்தும் என்று ஏற்கனவே கூறியுள்ளார். நான் இந்தியாவில் தான் இருக்கிறேன். எங்கும் தப்பியோடவில்லை. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பின் இங்கு இருக்க மாட்டேன்’ என்றார். இங்கிலாந்து குடியுரிமை பெற்ற கிரண்தீப் (29), ‘வாரிஸ் பஞ்சாப் டே’ என்ற தீவிரவாத அமைப்பிற்காக வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டும் விவகாரத்தில் அவரது பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post தப்பியோடிய காலிஸ்தான் ஆதரவு தலைவன்; அம்ரித்பாலை தேடுவது சட்டவிரோதமானது: இங்கிலாந்து குடியுரிமை பெற்ற மனைவி ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Khalistan ,Amritpal ,UK ,Amritsar ,Punjab ,Amritpal Singh ,Kirandeep Kaur ,
× RELATED கனடா பிரதமர் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்: இந்தியா கண்டிப்பு